தஞ்சாவூர் ஆகஸ்ட் 1
தஞ்சாவூர் நகைச்சுவை மாமன்றத் தின் சார்பில் பல்வேறு சேவை பணி
யாற்றி வரும் 3 பேருக்கு விருது வழங்கி,பாராட்டும் விழா நடைபெற்றது
நிகழ்ச்சியில் மாமன்ற தலைவர் டாக்டர் நரேந்திரன் தலைமை தாங்கினார்.முன்னதாக செயலர் ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் சேவை செம்மல் விருதை திருவையாறு ஔவை ,ஒளவையாருக்கு கோவில் கட்டி, தமிழ் முறைப்படி கும்பாபிஷேகம் செய்தும், தமிழ் மாநாடுகள் நடத்தியும், உலக சாதனையாளர் விருது பெற்றவரும் டாக்டர் கலைவேந்தன் ,தஞ்சாவூர் சரஸ்வதி மகால் தமிழ் பண்டிதராக இருந்து சிறந்த பணியாற்றி வரும் டாக்டர் மணிமாறன் , தமிழ்நாடு அறிவியல் இயக்க பணி மூலமும், குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற சுகுமாரன் ஆகி யோருக்கு டாக்டர் நரேந்திரன் சால்வை அணிவித்து பாராட்டி விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.
விருது பெற்றவர்கள் ஏற்புரை வழங்கினார்கள்.முன்னதாக இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் டாக்டர் அன்பரன் நகைச்சுவையும் மனநலமும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்