திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர்:ஆக:18, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரி மலை ஊராட்சி அத்தனாவூர் பகுதியில் சுற்றுலா துறையின் மூலம் நடைபெற்று வரும் சாகச சுற்றுலா தல அமைக்கும் பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ. வில்வநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டாக்டர் உமா மகேஸ்வரி, சுற்றுலா வளர்ச்சி கழகம் குணேஸ்வர், சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) ஆனந்தன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உள்ளனர்.