ரியாத், பிப்.18-
பிளீஸ் இந்தியா அமைப்பின் அணில் வழியனுப்பு நிகழ்வில் ரியாத் மண்டல IWF நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கடந்த 16.02.2025 சனிக்கிழமை மாலை பர்னிச்சர் கம்பெனியில் கடந்த 34 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி அந்த கம்பெனி மிகப்பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகியதால் ஏழரை ஆண்டுகளாக தாயகம் செல்ல முடியாமல் இருந்த 124 பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து ப்ளீஸ் இந்தியா போன்ற அமைப்போடு பணியாற்றி அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய விஷயங்கள் கிடைக்க அரும்பாடுபட்ட கேரளாவைச் சேர்ந்த அணில் 16.02.2025 அன்று தாயகம் சென்றார். அவருக்கு ப்ளீஸ் இந்தியா அமைப்பு சார்பாக பாராட்டு கேடயம் வழங்கி வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் இந்தியன்ஸ் வெல்பார் பாரம் ரியாத் மண்டல தலைவர் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் நூர் முகமது, மண்டல விழி அமைப்பின் செயலாளர் திண்டுக்கல் ஷேக் அப்துல்லா கலந்து கொண்டு இந்தியன் வெல்பர் ஃபோரம் சார்பாக பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.