நாகர்கோவில் – மார்ச் – 09,
கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட இடத்தில் கிம்ஸ் மருத்துவமனை அமைந்துள்ளது. இதில் பேரூராட்சி தூய்மை பணியாளர் இடம் மருத்துவ கழிவுகளை முறையாகப் பிரிக்காமல் மருத்துவமனை ஊழியர்கள் கொடுத்து அனுப்பி அவர்கள் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொண்டு கொட்டி எரிக்கும் அவல நிலையானது பல காலங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது . இதை முறைப்படுத்த பலமுறை கோரிக்கை வைத்தும் சரி செய்யப்படவில்லை நேற்று நாம் தமிழர் கட்சியினரால் சிறை பிடிக்கப்பட்டு கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை மீண்டும் அதே பேரூராட்சி குப்பை ஏற்றும் வாகனத்தில் ஏற்றி மீண்டும் அதே கிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மக்கள் பிரதி நிதிகளே , வார்டு உறுப்பினர்களோ, யாரும் தங்களது சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. ஒரு புறம் கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகள், மாமிச கழிவுகள் கொண்டு வந்து குமரி மாவட்டத்தில் தொடர்ந்து கொட்டி வருகின்றனர். தற்போது கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்தில் மருத்துவ மனையை துவங்கிய கிம்ஸ் நிர்வாகம் கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதை விட குமரியில் மருத்துவ மனையை துவங்கினால் சுலமாக மருத்துவ கழிவுகளை கொட்டி குமரி மாவட்ட மக்களுக்கு பல்வேறு விதமான நோய்களை பரப்பலாம் என்று குமரி மாவட்டத்தில் மருத்துவ மனையினை துவங்கி உள்ளார்களோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனவே குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவ கழிவுகளை பேரூராட்சி தூய்மை பணியாளர்களிடம் மருத்துவ கழிவுகளை முறையாக பிரிக்காமல் கொடுத்து அனுப்பிய மருத்துவமனை நிர்வாகம் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.