தருமபுரி மாவட்டம், கூட்டுறவுத்துறையின் சார்பில் செம்மாண்ட குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் இயங்கும் முழு நேர நியாய விலை கடையில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு(அரிசி, சர்க்கரை,கரும்பு) வழங்கும் திட்டத்தையும், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர்
சாந்தி
தொடங்கி வைத்தார்.உடன் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி, முன்னாள் அமைச்சர் முனைவர் பழனியப்பன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சரவணன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மலர்விழி, வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் விநாயகம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.