ஈரோடு மே 2
நந்தா பாலிடெக்னிக் கல்லூரியின் தொழில் முனைவோர் மையத்தின் சார்பில் இறுதியாண்டு பயின்று வெளியேறும் மாணவர்களுக்கான இரண்டு நாட்கள் கொண்ட கருத்தரங்கம் நடைபெற்றது.
நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் சண்முகன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கினை பெருந்துறை டி.எம்.டபிளியோவின் இயக்குனர் ரவிச்சந்தர், குன்னூர் ராதிகா மீனாட்சி ஷங்கர் மற்றும் முனைவர் வெங்கடாசலம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.
கருத்தரங்கில் கலந்துக் கொண்ட சிறப்பு விருந்தினர்களையும், தொழில் கல்லூரி முதல்வர் மோகன்குமார் வரவேற்றார்
இதனைத் தொடாந்து தமிழில் வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப் அமைப்பிற்கு முக்கியத்துவம் அளித்து வணிக நிலப்பரப்பினை வடிவமைக்கும் சமீபத்திய போக்குகள் பற்றிய நுண்ணறிவுகளைப் பற்றி பெருந்துறை டி.எம்.டபிளியோ வின் இயக்குனர் ரவிச்சந்தர் விளக்கம் அளித்தார்.
செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் தொழில் நிலையான வளர்ச்சியினை உந்துதல் போன்றவற்றில் செயற்கை நுண்ணறிவு. இயந்திரக்கற்றல், இன்டர் நெட்-ஆப் திங்ஸ் போன்ற அதிநவீன தொழில்நுட்பத்தின் பங்குகளை குன்னூர் ராதிகா மீனாட்சி ஷங்கர்
மற்றும் முனைவர் வெங்கடாசலம் ஆகியோர் காணெலிக் காட்சி மூலம் எடுத்துரைத்து மாணவர்களை ஊக்கமளித்தார்கள்.
நிகழ்வின் முடிவில் கல்லூரியின் தொழில் முனைவோர் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் அல்லிமுத்து நன்றி கூறினார்.
இக்கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை நந்தா கல்வி அறக்கட்டளை நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் செயலர் திருமூர்த்தி, மற்றும் நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் நிர்வாக அலுவலர் வேலுசாமி ஆகியோர் பாராட்டினார்கள்.