மதுரை செப்டம்பர் 24: மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறையின் முதுகலை மாணவர்களுக்கான ஆய்வுமன்றக் கருத்தரங்கம் பண்டிதமணி அரங்கில் உதவிப் பேராசிரியர் முனைவர்
அ.மோகனா தலைமையில் நடைபெற்றது.
கருத்தரங்கை மாணவி சீ. வித்ய தர்ஷினி தொகுத்து வழங்கினார். மாணவி க.ச. வைஷ்ணவி வரவேற்புரை நிகழ்த்தினார் மாணவி செ. பிரியதர்ஷினி, ‘நெடுநல்வாடையில் அரண்மனை அமைப்பு’ என்ற தலைப்பிலும் மாணவி செ. புனிதா, ‘களவு வாழ்வில் இன்றைய நிலைப்பாடுகள்’ என்ற தலைப்பிலும் மாணவி நா. ரத்னப் பிரியா, ‘பரிபாடல் காட்டும் அணிகலன்கள் என்ற தலைப்பிலும் மூன்று கட்டுரைகளை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு. காந்திதுரை, மூத்த பேராசிரியர் மு. கற்பகம், ஆய்வு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் அ. மோகனா மற்றும் ரே. கோவிந்தராஜ் உள்ளிட்ட தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், மற்றும் முதுகலை மாணவ மாணவியர் பங்கேற்றனர்.