முதுகுளத்தூர், டிச: 27
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செல்வநாயகபுரம் ஊராட்சியை முதுகுளத்தூர் பேரூராட்சியுடன் இணைப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டி முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் மற்றும் கிளை கழக செயலாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அமைச்சர் இராஜகண்ணப்பன் அவர்களை சந்தித்து செல்வநாயகபுரம் ஊராட்சியை முதுகுளத்தூர் பேரூராட்சி உடன் இணைக்கும் நடவடிக்கையை ரத்து செய்யுமாறு கோரிக்கை மனு அளித்தனர். செல்வநாயகபுரம் ஊராட்சியில் உள்ள மக்கள் 100 சதவீதம் விவசாயத்தை நம்பியே உள்ளனர். ஊராட்சியில் உள்ள மக்கள் ஒற்றுமையுடன் உள்ள நிலையில் எங்கள் செல்வநாயகபுரம் கிராமத்தை முதுகுளத்தூர் பேரூராட்சியுடன் இணைப்பதால் கிராமத்திற்கு பெரிதாக எந்த பயனும் இல்லை எனவே எங்கள் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கையை ரத்து செய்யவேண்டும் என்று அமைச்சர் இராஜகண்ணப்பன் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.