சென்னை, செங்குன்றம் தீர்த்தக் கிரியம்பட்டு சேரன் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி செல்வ விநாயகர் ஆலய ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அர்த்த மண்டபம் அழகுற வர்ண வேலைகள் நிறைவு பெற்று தட்க்ஷிணாமூர்த்தி பவானி அம்மன் பாலமுருகன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் சுப தினத்தில் ஆலய தர்மகத்தா ஆர். சக்தி மோகன் தலைமையில் சிறப்பான முறையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.