கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பேருந்து நிலையம் அருகே கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கம் சார்பில் முதல்வரின் மக்களை தேடி துரித சேவை திட்டம் காய்கறி விற்பனை அங்காடி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான
தே.மதியழகன் கலந்து கொண்டு விற்பனை அங்காடியை குத்துவிளக்கேற்றி காய்கறிகள் விற்பனையை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் போச்சம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவரும் ஒன்றிய செயலாளருமான சாந்தமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் செந்தில், விவசாய அணி அமைப்பாளர் இளையராஜா, ஒன்றிய கவுன்சிலரும் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளருமான அம்மன் ராஜா, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சண்முகம், இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன், விவசாய அணி துணை அமைப்பாளர் காமராஜ், மாணவரணி துணை அமைப்பாளர் கௌதம், மருத்துவர் அணி துணை தலைவர் தென்னரசு, சரகத் துணைப் பதிவாளர் பாலமுருகன், சங்கத்தின் செயலாட்சியர் பெரியசாமி, பொது விநியோகத் திட்டம் துணை பதிவாளர் குமார், உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் பொது விநியோகத் திட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.