மானாமதுரை ஆக:30
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத்தில் திராவிட கழகம் சார்பில் நூற்றாண்டு விழா. மாவட்ட அமைப்பாளர் ச.அனந்த வேல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்டத் தலைவர் இரா.புகழேந்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து மானாமதுரை நகர் கழகத் தலைவர் ச.வள்ளி நாயகம் திருப்புவனம் ஒன்றியச் செயலாளர் பிரமனூர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் கழக தலைமை பேச்சாளர் இராம. அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக மானாமதுரை முன்னால் பேருராட்சித் தலைவர் தீனதயாளன் ஆகியோர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி மூட நம்பிக்கை ஒழிப்பு பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு குறித்து விளக்கி பேசினர்.
இந்த நிகழ்வின் போது
நகர்க்கழக இலக்கிய அணி அமைப்பாளர் நல்லாசிரியர் மோகனசுந்தரம் நகர்மன்ற உறுப்பினர் சோம சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழா நிறைவில் வேம்பத்தூர் ஜெயராமன் நன்றி கூறினார்.