திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர்:ஜூலை:28, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்காக இடத்தை தேர்வு செய்யும் பணியினை சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் ஆர்.சுப்பிரமணியன், பட்டு தேவானந்த் ஆகியோர் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.நாராயணன் , மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி எஸ்.மீனா குமாரி , தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஓம்பிரகாஷ் , வருவாய் கோட்டாட்சியர் ராஜசேகரன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.