நாகர்கோவில் அக் 1
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போக்குவரத்து காவல்துறையினர் நாகர்கோவில் மற்றும் ஆரல்வாய்மொழி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, பதிவு எண் இல்லாமல் வாகனம் ஓட்டியது ஆகிய விதிமீறல்களுக்குரிய மோட்டார் வாகன சட்டப் பிரிவுகளின் கீழ் மொத்தம் 342 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.364000/- அபராதமாக விதிக்கப்பட்டது.
மேலும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டி வரப்பட்ட கார் மற்றும் 14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.