நாகர்கோவில் ஆக 13
நாம் தமிழர் கட்சியின் பத்மநாபபுரம் தொகுதி சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து குமரி மாவட்டத்தில் உள்ள மலைகளை உடைத்து எடுத்து இங்குள்ள கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்துவதை முற்றிலுமாக தடுக்க கோரியும், கிரசர்களிலிருந்து வெளியேறும் பாறைப்பொடிகளால் காற்று மாசடைந்து பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்துவதால் அதை தடுக்க கோரியும் மனு அளிக்கப்பட்டது. அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது :-
குமரி மாவட்டம் செறுகோல் ஊராட்சி கிளங்குவிளை குடியிருப்பிற்கு அருகாமை பகுதியிலுள்ள மலைக்குன்றை உடைத்து கடத்துவதை தடுக்க கோரியும்,
சித்திரங்கோடு முதல் வலியாற்றுமுகம் , காயல்கரை வரையிலும் உள்ள கிரசர்களிலிருந்து வெளியேறும் இரசாயண கழிவு நீர் ஆற்றில் கலப்பது மற்றும் கிரசர்களில் இருந்து வெளியேறும் பாறை பொடியால் தூசு மண்டலமாவதை தடுக்க கோரியும்,
குமரி மாவட்டம் உட்பட தமிழக மலைகளை வெட்டி கனிமவளங்களை கேரளாவிற்கு கடத்துவதை முற்றிலும் தடுக்க கோரியும்,
மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் பெல்வின் ஜோ முன்னிலை வகித்தார், பத்மநாபபுரம் – குமரி மாவட்ட செயலாளர் சீலன் தலைமை தாங்கினார்,
தலைவர் சத்திய தாஸ், மருத்துவர் பாசறை செயலர் ஜோஸ்,
மத்திய தொகுதி செயலாளர் விஜூ, துணை தலைவர், ரெத்தினராஜ், ஜாண் ஆலிவர், திக்கணங்கோடு ஊராட்சி ஜெமினி,
நாகர்கோவில் மாவட்ட தலைவர் ஜெயன்றீன், தனுஷ், விளவங்கோடு தொகுதி விக்டர், செறுகோல் ஊராட்சி சிவக்குமார், சுஜித், வினீஷ், ஜெய்ன்ஸ்லால், அரவிந்த், சுஜின் மேலும் பலர் கலந்துகொண்டனர்.