முரசு நாடு முருகன் அறக்கட்டளை சார்பில் இரண்டாம் ஆண்டு தைப்பூச திருவிழா ரத யாத்திரை..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முரசு நாடு முருகன் அறக்கட்டளை நடத்திய இரண்டாம் ஆண்டு தைப்பூச திருவிழா ரத யாத்திரை ராயக்கோட்டை சாலையில் உள்ள புகழ்பெற்ற பண்டே ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இருந்து ரத வாகன ஊர்வலமாக சென்று பாகலூர் சாலையில் உள்ள தாசப்பா திருமண மண்டபத்தில் நிறைவு பெற்றது முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பாஜக மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் எம் என் நாகராஜன் மற்றும் துணை மேயர் ஆனந்தைய்யா. பாஜக,spk. சினிவாசன் ஆகியோர் இந்த ரத யாத்திரையை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து ஊர்வலமாக வந்து தனியார் மண்டபத்தில் நிறைவு பெற்றது அங்கு தைப்பூசத் திருநாளை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தி பாடல்கள் பக்தி நடன நிகழ்ச்சிகள் பம்பை டிரம்ஸ் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முரசு நாடு முருகன் அறக்கட்டளை குழு உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தார்கள். தலைவர் விஜய் பாஸ்கர். செயலாளர் பிரகாஷ், பொருளாளர் சோபன் பாபு, அமைப்பாளர் விஜய் கண்ணா, செய்தி தொடர்பாளர் சபரீசன், துணைத் தலைவர் சித்தா சுப்பிரமணியம், ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் சீனிவாஷ், சாய் கிரண் விஜயகுமார் சரவணகுமரன் மூர்த்தி முரளி, ஆகியோர் மிக சிறப்பாக செய்தனர், நிகழ்ச்சியை காண வந்த பக்தர்களுக்கு சுமார் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது,