தருமபுரி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு
தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவா தலைமையில் தருமபுரி மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் தருமபுரி நகராட்சி மூலம் செயல்படும் முதியோர்கள் காப்பகத்தில் 5,000 ரூபாய் மதிப்பில் அரிசி, பருப்பு, பிஸ்கட்,எண்ணெய்,போன்ற சமையல் பொருட்களை சுற்றுச்சூழல் அமைப்பினர் வழங்கினார்கள். இதில் செந்தில்குமார், இலக்கியம்பட்டி வெங்கடேஷ், கணேஷ், பிரவீன், பெரியண்ணன், கோவிந்தன் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.