மதுரை நவம்பர் 7,
மதுரையில் உங்கள் இல்லம் தேடி ஆவின் – பொதுமேலாளர்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கும், அனைத்து பொதுமக்களுக்கும் ஆவின் நெய் மற்றும் இனிப்பு வகைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் “நடமாடும் பாலகங்கள்” ஆவின் மூலம் 25.10.2024 முதல் தொடங்கப்பட்டுள்ளது
உங்கள் இல்லம் தேடி ஆவின் என்ற பதாகைகளுடன் “3” வாகனங்கள் நெய் மற்றும் அனைத்து வகையான இனிப்பு வகைகள், நெய் முறுக்கு, மிக்சர் போன்ற பால் உபபொருட்களுடன் நகரின் அனைத்து பகுதிகளுக்கும் நேரிடையாக சென்று பொதுமக்களுக்கு சேவை செய்து வருகின்றன. இவ்வாகனம் நகரின் முக்கிய பகுதிகளான அண்ணா பேருந்து நிலையம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் பை-பாஸ் சாலை, மாரியம்மன் தெப்பகுளம், பெரியார் பேருந்து நிலையம் மற்றும் அனைத்து அப்பாட்மெண்ட்களுக்கும் செல்லும். இதனுடன் நகரின் முக்கிய இடங்களில் தற்காலிக பாலகம் அமைத்து பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தீபாவளிப் பண்டிகைக்கு அனைத்து இல்லங்களிலும் ஆவினின் சுவையான, தரமான பால் பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆவின் செயல்பட்டு வருகிறது. இந்த நடமாடும் பாலகம் உங்கள் பகுதிக்கு வர வேண்டும் என விரும்புவோர் உதவி பொதுமேலாளர் (விற்பனை) கைபேசி எண்
79044 35622 இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்பதை பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.