கிருஷ்ணகிரியில் கோஆப்ரெட்டிவ் கலெனி 3 -வது குறுக்குத்தெருவில், ரெப்கோ வங்கியின் மேல் மாடியில் சுமார் 2500 சதுர அடியில் எவ்வித அனுமதியோ ஆவணங்களோ இன்றி பொதுமக்களுக்கு உடல் எடையை குறைக்கும், உடல் வலியை போக்கு, குழந்தையின்மையை சரி செய்திட , புற்றுநோயை குணப்படுத்திடும் என்ற கவர்ச்சிகர விளம்பர நோட்டிஸ் விநியோகம் செய்து மூலிகை மருந்துகள் விற்பனை செய்து நாள் ஒன்றுக்கு சுமார் 100 முதல் 150 பேர் வரை எவ்வித ரசீது வழங்காமல் தலா 500 பெற்றுக்கொண்டு நீராகார மூலிகை மருந்துகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 26.7.2024 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மருத்துவத்துறை, காவல்துறை, வருவாய் துறை மருந்துகள் கட்டுப்பாட்டு துறை அலுவலர்கள் திடீர் ஆய்வில் மேற்கொள்ளப்பட்டதில். நிகழ்விடத்தில் எவ்வித ஆவணங்களும் இன்றி மருத்துவம் பயிலாமல் 15 நபர்கள் கொண்ட குழு- யூ- ஆர்- யாப்பி வெல்லுலாயின் சென்டர் என்ற பெயரில் இயங்கி வந்த மையத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன் பேரில் நெடுகல் கிராமத்தைச் சேர்ந்த
R.ராம் பிரபு .42
என்பவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் விற்பனை செய்யப்படும் மூலிகை மாத்திரைகள் மற்றும் பொருட்களால் பொதுமக்களுக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும் ஆகவே இது போன்ற போலியான மூலிகை மையங்களை யாரும் நம்ப வேண்டாம் என இதன்வழி அதிகாரிகள் தெரிவித்தனர்