டிச. 12
திருப்பூர் மாநகர் மாவட்டம், திருப்பூர் மாநகராட்சியில் பனியன் தொழில் உள்ளிட்ட அனைத்து தொழில் நிறுவனங்களும் திமுக அரசின் வரிக்கொள்கையினால் ( வரி விதிப்பு அரசாணை) மிகவும் பாதிப்படைந்துள்ளன. கட்டிட வரைப்பட கட்டணம், கட்டிட அனுமதி கட்டணம், வீட்டுவரி, வணிகவரி ஜிஎஸ்டி வரி, பழைய கட்டிடங்களை மறு ஆய்வு செய்து புதிய வரி விதித்தல் போன்றவற்றால் தொழில்துறையினர் திருப்பூர் மாவட்டத்தை விட்டு வெளியேறி வேறு மாநிலங்களுக்கு சென்று தொழில் துவங்க வேண்டிய சூழ்நிலை உருவாகி வருகிறது. சொத்து வரி உள்ளிட்ட மேற்கண்ட வரி உயர்வினை உடனடியாக திரும்பப் பெற்று திருப்பூர் தொழில் முனைவோர் மற்றும் லட்சக்கணக்கான தொழிலாளிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தினை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கடந்த 03.12.2024 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கூட்டணி கட்சியினர் பல்வேறு அமைப்பினர் பல்லாயிரக்கணக்கான பங்கேற்ற மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் வெற்றிகரமாக நடந்தது அதில் எஸ்டிபிஐ கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.
மேற்கண்ட கடுமையான வரி உயர்வினால் திருப்பூர் மாநகரத்தில் வியாபாரிகள் கடை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வணிகர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறி உள்ளதை கண்டித்து வரும் 18.12.2024 ஆம் தேதி திருப்பூரில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும் திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை அறிவித்துள்ளது.
விடியா திமுக அரசையும், மத்திய அரசை கண்டித்தும் நடைபெற உள்ள கருப்புக்கொடி போராட்டத்திற்கு முழு அடைப்பு போராட்டத்திற்கும் இன்றும் என்றும் என்றென்றும் மக்கள் நலனில் முழு அக்கறை கொண்டு செயல்பட்டு வருகின்ற SDPI கட்சி தனது முழு ஆதரவினை வழங்கும் என்றும், இத்தீய சக்திகளை வீட்டிற்கு அனுப்பிட ஒன்று சேர்ந்து போராடுவோம் எனவும், வரும் 18ம் தேதி நடைபெறுகின்ற கடையடைப்பு போராட்டத்திற்கு SDPI கட்சி தனது முழுமையான ஆதரவை தருகிறது.