குளச்சல், மார்- 11
மண்டைக்காடு அருகே உள்ள கல்லத்திவிைளையைச் சேர்ந்தவர் ஹரிதாஸ் (54). இவர் அய்யா கோயில்களில் திரு ஏடு வாசிக்கும் பணியை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் மண்டைக்காடு பகுதி பொட்டலில் உள்ளது. நேற்று ஹரிதாஸ் ஜேசிபி மூலம் தனது நிலத்தின் வழி பாதையை மண் கொட்டி சமன் செய்து கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த மாதவிளையை சேர்ந்த செல்வராஜ் என்பவர் வழிப்பாதை தொடர்பாக ஹரிதாசுடன் தகராறு செய்தார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே ஆத்திரமடைந்து செல்வராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஹரிதாசை வெட்டினார்.
இதில் பலத்த காயம் அடைந்த ஹரிதாசை அக்கம் பக்கத்தினர் மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் மண்டைக்காடு போலீசார் செல்வராஜ் மற்றும் மருதுவிளையை சேர்ந்த சந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.