மதுரை டிசம்பர் 20,
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் மதுரை மாநகராட்சி மற்றும் அங்கூரான் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் அறிவியல் மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அங்கூரான் நிறுவன முதன்மை செயல் இயக்குநர் பீமல் குமார் பட்வாரி, ஆணையாளர் ச.தினேஷ் குமார், ஆகியோர் பெற்றுக் கொண்டனர் அருகில் துணை மேயர் தி.நாகராஜன் உடன் உள்ளார்.