கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியை சேர்ந்த சில மாணவர்கள் நேற்று கல்லாவி வழியாக யு18 என்கிற நகரப்பேருந்தில் சென்றுள்ளர். அப்போது பேருந்தினுள் உட்காராமல் பேருந்து படிக்கெட்டில் நின்றுக்கொண்டு மொபைலில் செல்பி வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. பல முறை நடத்துனர் மற்றும் ஓட்டுனர் எச்சரித்தும் மாணவர்கள் தொடர்ந்து படிக்கெட்டில் சாகச காட்சிகளை அறங்கேற்றி வந்தனர். தொடர்ந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் எச்சரித்து வந்ததால் கடுப்பாகி போன மாணவர்கள் ஊரில் உள்ள சக நண்பர்களுக்கு போன் போட்டு தெரிவிததின் பேரில், ஒண்டி பணமரம் என்ற பேருந்து நிறுத்தத்தில் ஏறிய 5க்கும் மேற்பட்டோர் நடத்துனர் மற்றும் ஓட்டுனரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பேருந்து ஓட்டுனர் பேருந்தை கல்லாவி காவல் நிலையத்தில் நிறுத்தியுள்ளார். காவல் ஆயவாளர் ஜாபர்உசேன் அனைத்து மாணவர்களையும் எச்சரித்து அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து நேற்று பள்ளிக்கு வந்த போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் நாகலட்சுமி மற்றும் கல்லாவி காவல் ஆய்வாளர் ஜாபர்உசேன் மாணவர்களுக்கு உபதேசம் வழங்கி, பேருந்தினுள் ஓழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறித்தினர். பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் மாணவர்களுக்கு புத்திமதி கூறினார்.