கன்னியாகுமரி, அக்.1-
குமரி மாவட்டதில் விவேகானந்தா கேந்திர வித்யாலயா மெட்ரிக் பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகம் ஒற்றையால்விளையில் கடந்த 27ஆம் தேதி தொடங்கி வருகிற 3-ஆம் தேதி வரை நடக்கிறது .
டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர் பங்கு என நடத்தப்பட்ட முகாமில் இன்று பள்ளி மாணவர்கள் கன்னியாகுமரி அரசு மருத்துவமனை வளாகத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர் .
கன்னியாகுமரி பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலர் சி.எஸ்.சுபாஷ் முகாமினை தொடங்கி வைத்து மரக்கன்றுகளை நட்டார் .இதில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராஜூகுமார் உட்பட மாணவர் பலர் பங்கேற்றனர்.