பரமக்குடி,அக்.4 :
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள கீழப்பெருங்கரை கிராமத்தை சேர்ந்த உக்கிரபாண்டி மகன் உதயகுமார் (14), ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.தந்தை உக்கிரபாண்டி இராமநாதபுரத்தில் சுமை தூக்கும் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். உதயகுமார் தான் வளர்க்கும் ஆடுகளுக்கு இரை சேகரிக்க சென்ற போது பாம்பு கடித்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பார்த்திபனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.