மயிலாடுதுறையில் பள்ளி விளையாட்டு விழா போட்டியை தொடக்கிவைத்த ஆட்சிமன்றக் குழுத்தலைவர் ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், டிஎஸ்பி எஸ்.பாலாஜி.
மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 39-வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
பள்ளி ஆட்சிமன்றக் குழுத்தலைவர் ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் தலைமை வகித்து, ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்து அருளாசி கூறி பேசினார். சிறப்பு அழைப்பாளராக டிஎஸ்பி எஸ்.பாலாஜி பங்கேற்று, தேசிய கொடியை ஏற்றிவைத்து, சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவுகளுக்கான போட்டிகளை தொடக்கி வைத்தார். தொடர்ந்து, விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட அரசு வழக்குரைஞர் ராம.சேயோன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் பரிசுகளை வழங்கி பேசினார். துணைத்தலைவர் முருகேசன், நிர்வாகச்செயலர் பாஸ்கரன், பொருளாளர் சுப்பிரமணியன், பள்ளி முதல்வர் சரவணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.