தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட முடுக்கு தெருவில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் துணைத் தலைவர் செயலாளர் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு சான்றிதழ்களை பேரூராட்சி மன்றத் தலைவர் AK கமால் தீன் வழங்கினார். இக்கூட்டத்தில் பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பாலசிங் அசோக் குமார் முத்து பிச்சமுத்து(எ) சிவா சங்கரேஸ்வரி ராம்குமார் ராஜலட்சுமி முருகன் ஆகியோர் உட்பட
பெற்றோர்கள் ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவியர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.