ஈரோடு டிச. 2
காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இதுவரை 10 ஆயிரம் பேருக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு உள்ளது.
இது போல ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது மாநில தலைவர் செல்வப் பெருந்தகை வழங்கிய காசோலையை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட தலைவர் டாக்டர் மக்கள் ராஜன் வழங்கினார். பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் 40 ஆயிரமும், கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 25000, பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 25000, மருத்துவம் சார்ந்த படிப்புகளை படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு சுமார் ஒரு லட்சமும், பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு ரூபாய் 15,000 மற்றும் 10 ஆயிரம் மொத்தமாக சுமார் 9,40,000 ரூபாய் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வழங்கிய காசோலையை ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் 28 மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் வழங்கினார். இந்த காசோலையை பெற்று கொண்ட மாணவர்கள் இதை வழங்கிய மாநில தலைவருக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல் பி பாலசுப்ரமணியம் வட்டார தலைவர்கள் கொடுமுடி கிழக்கு கோபாலகிருஷ்ணன் கொடுமுடி மேற்கு டிஸ்கோ முருகேஷ் சென்னிமலை வடக்கு ஓசி சண்முகம் மொடக்குறிச்சி வடக்கு ரவி மாவட்ட துணை தலைவர் தில்லை சிவக்குமார் மாவட்ட பொது செயலாளர் சக்திவேல் மாவட்ட நிர்வாகிகள் குமார் பாபு சந்திரமோகன் மாவட்ட டிசிடியு தலைவர் சிவகிரி செந்தில் அஷ்ரப் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர் .