மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள ஸ்ரீ நடனகோபால நாயகி பஜனை மடத்தில் சிங்கப்பூர் வாழ் தமிழரும் சமூக ஆர்வலருமான திலீப் பாபு குடும்பத்தினர் மதுரை மாநகரில் உள்ள கல்லூரியில் பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவியர்கள் 300 க்கும் மேற்பட்டோருக்கு தலா ரூபாய் 5000 /- வீதம் கல்வி உதவிக்கான காசோலையை மாணவ, மாணவியர்களிடம் நேரடியாக வழங்கினார்.
மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள உயர் கல்வி படிக்க முடியாமல் வறுமையில் வாடும் மாணவிகள் மூன்று பேருக்கு ஐஏஎஸ் படிப்பதற்கான அனைத்து உதவிகளையும் திலீப் பாபு குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து
திலீப் பாபு பேசும் போது, மாணவ மாணவிகளுக்கு செய்யக்கூடிய உதவிகளால் நான் எதையும் அவர்களிடம் எதிர்பார்க்கவில்லை மேலும் அவர்களிடம் எதிர்பார்க்கக் கூடிய ஒன்று என்றால் அவர்கள் நல்ல முறையில் கல்வியில் முன்னேறி உயர் பதவியை அடைவதற்கான அனைத்து நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் என்பதே தனது நோக்கம்
என்று கூறினார்.