திருப்பூர்டிச. 5
மாநகராட்சியில் சொத்து வரி வீட்டு வரி குடிநீர் மற்றும் குப்பை வரி உள்ளிட்டவை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ஆண்டுதோறும் ஆறு சதவீதம் சொத்து வரி உயர்த்தப்படும் என்ற வரி உயர்வை திரும்பப் பெறக் கோரி திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு மேயர் தினேஷ்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கூட்டத்தை விட்டு வெளியேறிய அதிமுக உறுப்பினர்கள் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து அதிமுக மாமன்ற உறுப்பினர்களை குண்டு கட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர் இந்த சம்பவத்தை கண்டித்தும் வணிக நிறுவனங்கள் கட்டிட வாடகைக்கு 18 சதவிகித ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி முன்பாக மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி தலைமையில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது, மாநகராட்சி எதிர்க்கட்சி கொரடா கண்ணப்பன் வரவேற்புரை ஆற்றினார். திருப்பூர் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்தார், திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம் எஸ் எம் ஆனந்தன், முன்னாாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன், முன்னாாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவசாமி, வடக்கு எம்எல்ஏK.N.விஜயகுமார் முன்னாள் எம்எல்ஏ
சு. குணசேகரன் கரைைப்புதூர் நடராஜன், NS. நடராஜன், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், அதிமுக கிளை நிர்வாகிகள் என 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் எஸ்டிபிஐ, மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம், உள்ளிட்ட கூட்டணி கட்சிளும் அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு, ஆதரவு தெரிவித்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னாள் அமைச்சரும், தலைமை நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி பங்கேற்று பழச்சாறுகளை வழங்கி உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார். இதை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில், திமுக ஆட்சி காலத்தில் திருப்பூர் மாவட்டத்திற்கு எந்த ஒரு திட்டமும் இதுவரை வரவில்லை, அத்தனை திட்டங்களையும் அம்மா அரசின் வழியாக எடப்பாடியார் கொடுத்தது தான், மேம்பாலங்கள், பாலங்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கழிவுநீர் கால்வாய், பேருந்து நிலையம் என அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்தது.அதிமுக அரசுதான், ஆனால் திமுக எந்த திட்டமும் கொண்டு வராமல் சொத்து வரி, வீட்டு வரி உயர்த்தி உள்ளது, மின் கட்டணம் உயர்வு, அதே போன்று திருப்பூர் பனியன் தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, ஆகவே கண்டிப்பாக இந்த உண்ணாவிரத போராட்டத்தை பார்த்தாவது வரி உயர்வை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும், திமுக ஆட்சியில் தமிழகம் எங்கும் கொலை குற்றங்கள் அதிகரித்துள்ளது, இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், குற்றவாளிகள் பயப்படும் அளவிற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி யார் மழை பாதிப்பு உள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று பார்வையிட்டு, ஆறுதல் தெரிவித்து குறைகளை கேட்டு வருகிறார், மழை பாதிப்புக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இந்த அரசு மேற்கொண்டு இருக்க வேண்டும், எடப்பாடியார் முதல்வராக இருக்கும் பொழுது வறட்சி, மழை போன்ற அனைத்து பாதிப்புகளுக்கும் ஒரு குழு அமைத்து பணியாற்றியுள்ளம், ஆனா அந்த அளவுக்கு இந்த ஆட்சியில் செயல்பாடுகள் இல்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேட்டி அளித்தார்.