சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சிக்கு உட்பட்ட அல்லிநகரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தண்டீஸ்வரர் அய்யனார் திருக்கோயிலில் சனிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக மூலவர் தண்டீஸ்வரர் அய்யனாருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு
16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஆதிமூல லிங்கத்திற்கும் நந்தியப் பெருமானுக்கும் குரு பகவான் தட்சிணாமூர்த்திக்கும் இந்த சிறப்பு விசேஷ வழிபாடு பூஜைகள் பக்தர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த சிறப்பு வழிபாட்டில் அல்லிநகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர்.
வருகை புரிந்த பக்தர்கள் அனைவருக்கும் அய்யன் அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.