தேனி மாவட்டம், ஜூன் – 19
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இணை இயக்குனர் அவர்களின் அறிவுறுத்தலின் படி பள்ளிக்கு பெற்றோர்களை வரவழைத்து மாணவர்களுடன் இணைந்து பள்ளி தலைமை ஆசிரியர் திரு. ஜ.ஜாபர் சித்திக் அவர்கள் முன்னிலையில் பசுமைப்படை சார்பாக மா வேம்பு நாவல் புங்கை அரசு என 5 மரக்கன்றுகள் நடப்பட்டு அவற்றிற்கு மாணவர்களின் தாயார் பெயர் சூட்டப்பட்டது இந்த நிகழ்ச்சியில் அந்தந்த மாணவர்கள் தங்கள் மரக்கன்றை தினமும் நீரூற்றி பாதுகாத்து வளர்ப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் இந்நிகழ்வுக்கு பெற்றோர்கள் இருபால் ஆசிரியகள் மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்