தருமபுரி மாவட்டத்திற்கு ஐகோர்ட் நீதிபதி சுந்தர் வருகை புரிந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மாவட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மரக்கன்றுகள் பாலித்தீன் கவர்களில் நட்டு வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது .மாநில சட்டப்பணிகள் குழு மாவட்ட முழுவதும் உள்ள சட்டப்பணிகள் குழு மூலம் பொது இடங்கள், சாலை யோரங்களில் மரம் நடுவதற்கு திட்டம் வகுத்து ள்ளோம். இதில் ஒரு மாதம் முழுவதும் ஆயிரம் மரக்கன்றுகளை பாலிதீன் கவர்களில் நட்டு, ஓராண்டு வரை பராமரித்து அதன் பிறகு அரசு பொது இடங்கள், சாலைகள் உள்ளிட்ட இடங்களில் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் உதவி செய்கின்றனர். இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படும் பட்சத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள எல்லா நெடுஞ்சாலைகளிலும் பசுமையாக மாறும். இப்போது வனத்துறையினர் 11 லட்சம் மரக்கன்றுகளை வைத்துள்ளனர். இதனை நட்டு பராமரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்றார். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொண்டனர்.
மாவட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மரக்கன்றுகள்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics