மயிலாடுதுறை.29
மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ரூ. 42 லட்சம் மதிப்பிலான ரத்த சேகரிப்பு வாகனத்தை சந்தான கிருஷ்ணன் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கொழையூர் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஆடிட்டர் எஸ்.சந்தானகிருஷ்ணன். தற்போது சென்னையில் வசித்து வரும் இவர் தனது வருமானத்தில் பெரும் பகுதியை மருத்துவம், கல்வி, ஆன்மீகத்திற்கு உள்ளிட்ட நலத்திட்ட பணிகளுக்கு செலவிட்டு வருகிறார். இந்நிலையில் தனது பூர்வீக மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வந்த நிலையில் இன்று ஆடிட்டர் சந்தானகிருஷ்ணன் தனது ஸ்ரீ சந்திரசேகர் டிரஸ்ட், பிகேஎஃப் மற்றும் ஆர்கியான் கெமிக்கல்ஸ் மூலம் ரூ 42 லட்சம் மதிப்பீட்டில் இன்று கொடையாளர்களிடம் ஒரே நேரத்தில் ரத்தம் சேகரிக்கும் வகையில் அதில் நவீன வசதிகளுடன் பிரத்தியோகமாக தயார் செய்யப்பட்ட நடமாடும் ரத்த சேகரிப்பு வேனை மயிலாடுதுறை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வழங்கினார். மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் பானுமதி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு டிஆர்ஓ மணிமேகலையிடம் ஆடிட்டர் சந்தானகிருஷ்ணன் நடமாடும் ரத்த சேகரிப்பு வேனின் ஆவணங்கள் மற்றும் சாவியை ஒப்படைத்தார். தொடர்ந்து ஆர்டிஓ மற்றும் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் இணைந்து சாவி மற்றும் ஆவணங்களை மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சிஎம்ஓ. டாக்டர் மருதவாணனிடம் முறைப்படி ஒப்படைத்தனர். இந்நிகழ்ச்சியில் கொழையூர் ஸ்ரீதர், டாக்டர் ராஜசேகர், முன்னாள் எம்எல்ஏக்கள் ஆசைமணி, குத்தாலம் கல்யாணம், ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் அருண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்