சங்கரன்கோவில். ஆக.23
சங்கரன்கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சங்கரன் கோவில் வடக்கு ரத வீதியில் வைத்து வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு. சங்கரன்கோவில் நகரைச் சேர்ந்த சான்றோர்களுக்கு விருது வழங்கும் விழா,அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு விருது வழங்கும் விழா, தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு பாராட்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெறுகிறது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும்,
திரைப்பட பாடகர்கள் மாலதி மற்றும் நெல்லை பிரபாகரன் கலந்து கொள்ளும் ஜே ஆர் எஸ் குழுவினரின் இன்னிசை கச்சேரியும் நடைபெறுகிறது. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சங்கரன் கோவிலில் சாதனை புரிந்த மண்ணின் மைந்தர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளபட்டுள்ளது.
படம் மெயில்.. வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ படம்