சங்கரன்கோவில், ஆக. 24.
சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோயிலும் ஒன்று. இங்கு சிவனும் விஷ்ணுவும் ஒன்று உலகுக்கு உணர்த்தும் வகையில் தவக்கோலத்தில் இருந்த அம்பாளுக்கு சுவாமி சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் ஆடித்தபசு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதுபோல் ஐப்பசி திருவிழா, ஆவணி தேரோட்டம், உள்பட பல்வேறு விழாக்கள் சிறப்பாக நடந்து வருகின்றன. இக்கோயிலில் கடந்த 2008ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இதையடுத்து 15 ஆண்டுகளுக்கு நேற்று கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக கோலாகலமாக நடந்தது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சங்கர நாராயண சுவாமி கோயிலில் கடந்த 16ம்தேதி முதல் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. மேலும்
கோயில் வளாகம் மேற்கு பகுதியில் சிறப்பு யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டது.
நேற்று காலை 6.30 மணிக்கு புண்ணிய வாசனம், 6ம்கால யாகசாலை பூஜை, திரவ்யா ஹூதி, 8 மணிக்கு மகா பூர்ணா ஹூதி, யாத்திராதானம், கலசங்கள் புறப்பாடு ஆகியவவை நடந்தது.
தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு வகையான வாத்தியங்களுடன் காலை
9 .18மணிக்கு சங்கரலிங்க சுவாமி, கோமதி அம்பாள், சங்கர நாராயண சுவாமி, விமானம் மற்றும் ராஜகோபுரம், மகா கும்பாபிஷேகமும் தொடர்ந்து தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. கோயிலில் கும்பாபிஷேக பூஜைகளை திருப்பரங்குன்றம் ராஜாபட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.கும்பாபிஷேக நிகழ்ச்சியில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார், முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட எஸ்பி சீனிவாசன் , அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் ,தருமபுர ஆதீனம் ஸ்ரீமத் தம்புரான் சுவாமிகள் மீனாட்சி சுந்தரர் தம்பிரான் சாமிகள், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் நாராயணன் ,சங்கரன்கோவில் சங்கர நாராயணர் சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் வக்கீல் சண்முகையா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன் வெள்ளைச்சாமி, முப்பிடாதி, முத்துலட்சுமி, சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், திமுக மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், உதயகுமார்மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், மாவட்ட விவசாய அணி ஸ்ரீகுமார், தொழிலதிபர்கள் திவ்யா ரெங்கன், வாழைக்காய் துரைப்பாண்டியன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஜெயராணி, சங்கரன்கோவில் உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள், நகராட்சி கமிஷனர் சபாநாயகம், சுகாதார அலுவலர் வெங்கட்ராமன் ஆய்வாளர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்