அஞ்சுகிராமம் நவ 5
விடுதலை சிறுத்தை கட்சி கன்னியாகுமரி முற்போக்கு மாணவர் கழகம் மாவட்ட துணை அமைப்பாளரும் சமூக ஆர்வலருமான இந்திரா நகர் முத்துக்குமார் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழுகு மீனாவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது கன்னியாகுமரி மாவட்டம்
அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளக்குளம் உள்ளது. குளத்தின் அருகாமையில் பன்றி பண்ணை ஒன்று இயங்கி வருகிறது இங்குள்ள அனைத்து கழிவுகளும் அருகாமையில் இருக்கக்கூடிய பள்ளகுளத்தில் வந்து சேர்கிறது மேலும் குளத்தின் அருகில் இந்திரா நகர் என்ற கிராமம் இருக்கிறது இங்கு 150 க்கு மேல் பட்ட குடும்பங்கள் உள்ளது பெசி பெரும்பாலும் விவசாய கூலி தொழிலாளிகள். காலை வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்புவார்கள். இங்குள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குளத்தின் மறுகால் ஓடை தண்ணீரில் குளிக்கிறார்கள் இந்த தண்ணீரானது சுகாதாரத்துக்கு கேடானதாக இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் அரிய வகை நோய்கள் ஏற்படுகிறது.. குளத்தோரங்களில் இருக்கக்கூடிய குடும்பங்கள் இந்த தண்ணீர் தான் உபயோகிக்கிறார்கள் முக்கியமாக மழைக்காலங்களில் பன்றி பண்ணையின் ஊழியர்கள் அதன் உரிமையாளர் அனைத்து கழிவுகளையும் திறந்து விடுகிறார்கள் கழிவுகள் குளத்து தண்ணீர்களுடன் கலந்து கொள்வதினால் துர்நாற்றம் அடிக்கிறது இதனால் அங்கு வசிக்ககூடிய மக்களுக்கு நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது பலமுறை மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்தும் இதுவரைக்கும் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது வேதனைக்குரியது இப்போது கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளரா க பொறுப்பேற்று மக்கள் பணிகளை செயல்படுத்தும் நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பன்றி பண்ணையை அப்புறப்படுத்த வேண்டும். மக்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மக்கள் நலன் கருதி இந்திராநகர் முத்துக்குமார் கோரிக்கை மறு அளித்துள்ளார்