வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கெலவரப்பள்ளி அணை, கேஆர்பி அணை, பாரூர் பெரிய ஏரி உள்ளிட்ட 6 இடங்களில் மணல் மூட்டைகள் தயார் நிலையிலும், கே.ஆர்.பி அணையில் மட்டும் 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தேசிய நலவாழ்வு குழும மேலாண்மை இயக்குநர் . அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி நகராட்சி, சேலம் தேசிய நெடுஞ்சாலை ஆஞ்சநேயர் கோயில் மேம்பாலம் அருகில், திருவண்ணாமலை மெயின் ரோடு கணபதி நகர் ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதையும், கே.ஆர்.பி.அணையில் உபரிநீர் வெளியேற்றும் பணி, வடகிழக்கு பருவமழையையொட்டி, தேவசமுத்திரம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தின் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தேசிய நலவாழ்வு குழும மேலாண்மை இயக்குநர் .ஷில்பா பிரபாகர் சதீஷ் . அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தேசிய நலவாழ்வு குழும மேலாண்மை இயக்குநர் அவர்கள், கிருஷ்ணகிரி நகராட்சி, சேலம் தேசிய நெடுஞ்சாலை ஆஞ்சநேயர் கோயில் மேம்பாலம் அருகில், கிருஷ்ணகிரி நகராட்சியிலிருந்து தேவசமுத்திரம் ஏரிக்கு செல்லும் மழைநீர் செல்ல ஏதுவாக ஜேசிபி இயந்திரம் மூலம் நீர்வரத்து கால்வாய் தூர்வாரும் பணிகள், திருவண்ணாமலை மெயின் ரோடு கணபதி நகர் பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் அகற்றும் பணிகளை ஆய்வு செய்து, மழைநீர் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தேங்கியுள்ளதை அகற்றவும், அப்பகுதியில் நீர்வரத்து கால்வாய்களை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதை உடனடியாக
அகற்ற நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.தொடர்ந்து, தற்பொழுது ஒசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணைக்கு 2700 கனஅடி தண்ணீர் வருவதையும், அந்த தண்ணீர் முழுவதையும் வெளியேற்றம் செய்வதை பார்வையிட்டார். அணையின் பாதுகாப்பு கருதி மேற்கொண்டு வரும் நீர் முழுவதும் அணையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டியுள்ளதால் சாத்தனூர் தென்பெண்ணை அணை வரை ஆற்றங்கரையோரத்தில் உள்ள மற்றும் தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. தென்பெண்ணை ஆற்றங்கரையோர பொதுமக்கள் ஆறு மற்றும் நீர்நிலைகளை கடக்கவோ, கால்நடைகளை ஆற்று பகுதிகளுக்கு கொண்டு செல்லவோ கூடாது பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கெலவரப்பள்ளி அணை, கேஆர்பி அணை, பாரூர் பெரிய ஏரி உள்ளிட்ட 6 இடங்களில் மணல் மூட்டைகள் தயார் நிலையிலும், கே.ஆர்.பி அணையில் மட்டும் 2 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், தேவசமுத்திரம் ஏரிக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு தேவசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மழைவெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை தங்கவைப்பதற்கான இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், கல்லுக்குறுக்கி ஊராட்சியில் ஆத்துக்கால்வாய் முதல் கல்லுக்குறுக்கி வரை சுமார் 1.1 கிலோ மீட்டர் தூரம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.35 இலட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு, சாலையின் தரத்தை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பையனப்பள்ளி ஊராட்சி, பையனப்பள்ளி காலனியில் வீடு பழுதுபார்க்கும் திட்டத்தின் கீழ், ரூ.1 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் பயனாளி திருமதி.மல்லிகா க/பெ.(லேட்) முரளி அவர்களின் வீடு பழுதுபார்க்கும் பணிகளையும், ரூ.55 ஆயிரம் மதிப்பில் பயனாளி .காந்திமதி க/பெ.முனுசாமி அவர்களின் வீடு பழுதுபார்க்கும் பணிகளை ஆய்வு செய்து கட்டிட பணிகளின்போது சம்பந்தப்பட்ட பயனாளிகள் உடனிருந்து பணிகளை கண்காணிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். மேலும், கட்டுமான பணிகள் தரமாகவும், விரைவாக முடித்து பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது, கிருஷ்ணகிரி நகரமன்ற தலைவர் .பரிதா நவாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் .மலர்விழி, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் .அறிவொளி, வட்டாட்சியர் .பொன்னாலா, நகராட்சி ஆணையர் (பொ) .ராமகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் .சிவபிரகாசம், .செல்லகண்ணம்மாள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.