சென்னை, செப்டம்பர்-25, சாம்சங் செயற்கை நுண்ணறிவில் இயங்கும் (ஏ.ஐ) ‘பிக் டிவி சிறப்பு பண்டிகை கால விற்பனையை சென்னையில்
துவக்கியிருக்கிறது. இதில் குறிப்பிட்ட ரூ. 2,90,000
மதிப்புள்ள பெரிய அளவிளான டி.விக்கு ரூ.1,00, 000 மதிப்புள்ள சவுண்ட் பாரை இலவசமாக வழங்குகிறது.
சவுண்ட் பார் என்பது தொலைக்காட்சிப் பெட்டி, கணினி அல்லது எம்.பி.3 பிளேயருடன் பயன்படுத்தப்படும் பல ஸ்பீக்கர்களைக் கொண்ட பார் வடிவ சாதனம் ஆகும் .
சாம்சங் இந்தியா விஷுவல் டிஸ்ப்ளே வணிகத்தின் மூத்த இயக்குநர் விப்லேஷ் டாங் இது குறித்து கூறும் போது:-
சாம்சங் பிக் டிவி ஃபெஸ்டிவல் 2024″ வாடிக்கையாளர்கள் சலுகைகளுடன் , பண்டிகைக் காலத்திற்கு முன்பாக செயற்கை நுண்ணறிவின் அனுபவங்களை குடும்பத்தோடு உணர்வதற்குப் பொழுதுபோக்கு அமைப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாகும்.
செயற்கை நுண்ணறிவு மூலமாக உயர்தர தொழில்நுட்பத்துடன் க்யூ சிம்பொனி, மற்றும் டால்பி, அட்மாஸ் மூலம் துல்லியமான சப்தத்துடன் திரையரங்கையே கண் முன் கொண்டு வரும்.
வாடிக்கையாளர்கள் 20% வரை கேஷ்பேக், 3 ஆண்டு உத்தரவாதம், 1இஎம்.ஐ (தவணை) தள்ளுபடி, மற்றும் ரூ. 2777 முதல் எளிதான தவணைகள் மற்றும் அல்ட்ரா-பிரீமியம் ஏ.ஐ-மூலம் இயக்கப்பட்ட பிக் டிவிகளுக்கு நீண்ட கால 36 இ.எம்.ஐகளை பெற முடியும். இச்சலுகைகள் நவம்பர் 10, 2024 வரை உள்ளது என்றார்.