ஜன:16
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் பல் சமய நட்புறவு கழகத்தின் சார்பில் தொப்புள் கொடி உறவுகளான அனைத்து தரப்பு மக்களுக்கும் தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் கரும்பு வழங்கும் நிகழ்வில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கரும்பு வழங்கி வாழ்த்துக்களை நிர்வாகிகள் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது மாவட்டத் தலைவர் ஷாஜகான் மாவட்ட இளைஞரணி தலைவர் உசேன் மாவட்ட கழக பேச்சாளர் கருப்புசாமி பாண்டி மாவட்ட பொருளாளர் செல்வகுமார் சிராஜில் மில்லத் நற்பணி மன்றத்தின் நிறுவனத் தலைவர் நுர் முகமது மாநகர துணைத் தலைவர் பாபு மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரேஷ் மாநகர வர்த்தக அணி செயலாளர் ஹனிபா பல்லடம் ஒன்றிய தலைவர் முகமது அலி ஒன்றிய துணைத் தலைவர் மீரான் திருப்பூர் ஒன்றிய தலைவர் சந்திரன் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.