ராமநாதபுரம், ஜன. 12-
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் தேவிபட்டினம் ரோட்டில் உள்ள வேலு மாணிக்கம் கலை, அறிவியல் மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ராமநாதபுரம் வேலு மாணிக்கம் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கல்லூரி தாளாளர் வேலு மனோகரன் தலைமையில் இணை தாளாளர் பார்த்தசாரதி, செயலாளர் சகுந்தலா முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் உள்ள நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கல்லூரி மாணவிகள் தமிழர் பாரம்பரிய உடைகளான தாவணி, சேலை அணிந்து வந்து கலந்து கொண்டனர்.
சமத்துவ பொங்கல் விழாவில் மாணவிகள் புலி வேடமிட்டு விழாவிற்கு வந்தவர்களை ஆடி பாடி வரவேற்றது அனைவரையும் கவர்ந்தது.
பொங்கல் விழாவில் மாணவியர்களின்
சிலம்பம், ஒயிலாட்டம் நடனம் கலை நிகழ்ச்சி போன்ற தமிழ் பாரம்பரிய கலைகளுடன் உங்களை மாணவிகள் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். விழாவில் கல்லூரி தாளாளர் மேலும் மனோகரன் தமிழரின் பாரம்பரிய பொங்கல் விழா கொண்டாடுவதின் முக்கியத்துவமான விவசாயம் செழிக்க வேண்டும். விவசாயிகள் மென்மேலும் தங்கள் தொழிலை மேம்படுத்த இயற்கை உதவிட வேண்டும். தமிழன் பாரம்பரிய பொங்கல் விழாவில் நம்முடைய பாரம்பரிய நிகழ்வுகளை மாணவிகள் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அதற்காகத்தான் இங்கு பாரம்பரிய நடனம் ஜாதி மதம் வேதமற்ற பொங்கல் விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகளை போற்றும் வகையில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதை உங்கள் வாழ்க்கையில் முன் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். விவசாயம் நம் தமிழர் கலாச்சாரம் அனைத்தையும் பெண்களாகிய மாணவிகள் நீங்கள் வருங்காலத்தில் இதை இன்னும் பல தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இது போன்ற சமத்துவ பொங்கல் விழா தமிழர் பாரம்பரிய வழியில் நடத்தி வருகிறோம். தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கல்லூரி முதல்வர் ரஜனி முன்னதாக வரவேற்புரை ஆற்றினார்.
கல்லூரி மாணவிகள் அனைவரும் உற்சாகத்துடன் உங்கள் வைத்து ஆடி பாடி மகிழ்ந்து தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கோசம் எழுப்பி பொங்கல் நல்வாழ்த்துக்கள் மாணவிகள் அனைவரும் தங்களுக்குள் கூறி ஆனந்தமாக பொங்கல் விழாவை கொண்டாடினர்.