அரியலூர்,செப்19
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 20 % சதவீத இட ஒதுக்கீட்டுக்காக உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாக
17ஆம் தேதி அன்று செந்துறை வன்னியர் சங்க கட்டிடத்திற்கு முன்பாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக 20% இட ஒதுக்கீடு பெற்று தந்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி வீர வணக்கம் செலுத்தும் விதமாக அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாமக கட்சியின் தியாகிகளின் உருவப்படத்திற்கு முன்னாள் பாமக மாவட்ட செயலாளர் செந்துறை ஒன்றிய சேர்மன் உலக.சாமிதுரை தலைமையில் அக்கட்சியில் தொண்டர்கள் ஒன்று கூடி வீரவணக்கம் செலுத்தினர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்