கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பேருந்து நிலையம் எதிரே கூட்டுறவுத்துறை மற்றும் ஆவின் துறையின் பொருட்களின் விற்பனை மேளா நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட்டுறவு துறை சார்பாக 71வது அனைந்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று போச்சம்பள்ளியில் 71வது அனைந்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இவ்விழாவில் கூட்டுறவுத்துறை மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் காட்சிபடுத்துப்பட்டிருந்தன. அதேபோல் ஆவின் நிறுவனத்தின் அனைத்து பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஞாயிற்று கிழமை வாரச்சந்தை என்பதால் சந்தைக்கு வந்திருந்த பொது மக்கள் ஆர்வத்துடன் விற்பனை மேளாவில் கலந்து கொண்டு காட்சிபடுத்தப்பட்டிருந்த பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
இந்நிகழ்வில் கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மண்ட இணை பதிவாளர் நடராஜ், துணை பதிவாளர் பெரியசாமி, பொது மேலாளர் முருகன் மற்றும் சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.