நாகர்கோவில் – நவ- 12,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஜிஸ்தி முஹம்மது தலைமையில் மாவட்ட ஆட்சி தலைவரை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்கள் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
குமரி மாவட்ட வியாபாரிகள் முழுக்க முழுக்க ரப்பர் தொழிலை மட்டுமே நம்பி வியாபாரம் செய்து வருகிறார்கள் கொரோனா பெரும் தொற்று ஏற்பட்ட பிறகு மாவட்டத்தின் பெரும்பாலான வியாபாரிகள் எதிர்பார்த்த வியாபாரமின்றி நாள்தோறும் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர். சில வியாபாரிகள் லட்சக்கணக்கில் பொருளாதாரத்தை முடித்து வாழ வழி இல்லாமல் தற்கொலை செய்த வியாபாரிகளும் உண்டு.
இந்நிலையில் சிறு, குறு, வியாபாரிகள் பண்டிகை காலங்களில் உள்ள சில்லறை வியாபாரங்களை மட்டுமே நம்பி உள்ளனர். பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் வெளியூர் பண முதலைகள் சிலர் குமரி மாவட்டத்திற்கு படையெடுத்து திருமண மண்டபம் மற்றும் சமூக நல கூடங்களை வாடகைக்கு எடுத்து தள்ளுபடி விற்ப்பனை விலையிலிருந்து 10% முதல் 20% வரை தள்ளுபடி என விளம்பரம் செய்கிறார்கள். இதனை நம்பி பொதுமக்கள் பொருட்களை வாங்கி ஏமாறுகிறார்கள் எனவே குமரி மாவட்ட வியாபாரிகளின் குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு இது போன்ற விற்பனை மேளாக்கள் நடத்த அனுமதிக்க கூடாது. மேலும்
சிறப்பு விற்பனை மேளா என்னும் பெயரில் தள்ளுபடியில் பொருள்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு திருமண மண்டபங்கள் சமூக நலக்கூடங்களில் வாடகைக்கு கொடுப்பவர்கள் மீது வியாபாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கேட்டும் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நவஸ்கான், ம.ம.க. மாவட்ட செயலாளர் சித்திக், துணை செயலாளர்கள் பயாஸ், அலி அக்பர், தொண்டரணி துணை செயலாளர் நயினார், சுற்று சூழல் அணி செயலாளர் சுல்பிகர், நாகர்கோவில் நகர நிர்வாகிகள் சேக் செய்யது அலி, சுக்கீர் உசேன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.