கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வந்த M/s.SAPL Realty Corporation Limited என்ற நிறுவனத்திற்கு பாத்தியப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டம், கட்டிகானப்பள்ளி கிராமத்தில் உள்ள பழைய சர்வே எண்:354/7 புதிய சர்வே எண்:354/10 உள்ள 2700 ச.அடி நிலம் மற்றும் அதில் உள்ள கட்டிடங்கள் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டம், 1997-ன் கீழ், அதிகாரம்பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களால் 11.12.2024 புதன்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் (அறை எண்:136) பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது. மேற்படி சொத்தின் அடிப்படை விலையாக ரூ.62,21,379/-(ரூபாய் அறுபத்தி இரண்டு லட்சத்து இருபத்து ஓராயிரத்து முன்னூற்று எழுபத்து ஒன்பது மட்டும்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட சொத்துக்களை பொது ஏலத்தில் எடுக்க விரும்புவோர், ஏல நிபந்தனைகள் தொடர்பான விபரங்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பெற்றுக் கொள்ளலாம். இவ்விபரங்கள் அந்தந்த அலுவலக விளம்பர பலகையிலும் ஒட்டப்பட்டுள்ளது எனவும், ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஏலத்தில் விருப்பம் உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் எனவும், நிறுவனத்திற்கு சொந்தமான மேற்படி அசையா சொத்தினை தற்போதைய நிலையில் உள்ளதை உள்ளவாறே ஏலம் விடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், ஏலத்தில் கலந்துகொள்வது தொடர்பாக உரிய விண்ணப்ப படிவத்தினை 09.12.2024 அன்று மாலை 5.00 மணிக்குள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1 ம் தளத்தில் உள்ள அறை எண்: 89-ல் ஒப்படைக்க வேண்டும். மேலும், ஏல தேதிக்கு முன்பாக, கிருஷ்ணகிரி வட்டாட்சியர் மற்றும் காவல் துணைக்
கண்காணிப்பாளர், பொருளாதார குற்றப் பிரிவு (II), சேலம் மூலமாக மேற்படி சொத்துக்களை பார்வையிடலாம் என அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள் தெரிவித்துள்ளார்.