திருப்பத்தூர்:ஆக:23, திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தருமராஜா கோயிலில் சலங்கை பூஜை விழா நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தில்லை நாட்டியப் பள்ளி அபிநயவித்வான் ஜோகுட்டி தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் பரத கலைகளை கற்றுக்கொள்ள ஆர்வத்துடன் பலரும் பங்கேற்றனர். பரத கலையினை கற்றுக்கொள்ள குரு வணக்கம் செலுத்திய பின்பு அனைவருக்கும் சலங்கை பூஜை செய்தனர். இவ்விழாவில் பரத கலையில் சிறந்து விளங்கும் பரத நாட்டிய மாணவன் K. சக்தி என்பவருக்கு சலங்கை பூஜை செய்தனர். இந்நிகழ்வில் ஸ்ரீ சக்தி குரூப் ஆஃப் இன்ஸ்டீயுசன் முதல்வர் K.நித்யா, நிறுவனர் காவிய மன்னன், பரத கலைஞர்கள், பொதுமக்கள், கலை ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.