தஞ்சாவூர் ..நவ12.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் நடந்த மாமன்னர் ராஜராஜசோழன் சதய விழாவில் 5 பேருக்கு ராஜராஜன்விருது வழங்கப்பட்டது விருதுதினை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா 2 நாட்கள் நடைபெற்றது இதன் நிறைவு நாளில் விருது வழங்கும் விழா நடைபெற்றது விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார்.
பட்டுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ அண்ணாதுரை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, துணை தலைவர் மேத்தாமுன்னிலை வகித்தனர் சதய விழா குழு தலைவர் செல்வம் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு மாமன்னர் ராஜ ராஜன் விருதுகளை வழங்கினார் விருதுகளை பேராசிரியர் தெய்வநாயகம், கல்வியாளர் புனிதா கணேசன், திரைப்பட ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், தொழிலதிபர் சுப்பிரமணிய சர்மா டாக்டர் குணசேகரன் ஆகியோரு க்கு வழங்கப்பட்டது. தேவார நாயகன் விருது திருத்தணி சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டது
அதைத்தொடர்ந்து கட்டுரை பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவி களுக்கும் பரிசு வழங்கப்பட்டன விருது மற்றும் பரிசுகளை வழங்கி குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசிகையில்: மாமன்னர் ராஜ ராஜனை நாம் போற்ற வேண்டும், போரற்ற உலகிற்கு அவர் ஆசைப்பட்டார். ஆனால் இன்று ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடைபெறுகிறது.
ராஜராஜன் நில அளவை, நிர்வாகத்துறை வெற்றி பெற்ற தோடு நீதியில் காவலனாக விளங்கினார். அவர் பொற்கால ஆட்சி நடத்தியவர். உலகம் உள்ளளவும் அவர் புகழ் இருக்கும், ஏழை வீட்டில் அடுப்பும் எரிய வேண்டும் .ஆலயத்தில் விளக்கும் எரிய வேண்டும் என்று ஒரு சேர சிந்தித்தவர் மக்களை தழுவி வாழ்வதுதான் நமது ஆன்மிகம் என்றார்
விழாவில் கவிஞர் வைரமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக உதவி ஆணையர் கவிதா நன்றி கூறினார்