நாகர்கோவில் நவ 24,
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்க உத்தரவிட்டார்.
அவரின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் பெண் காவலர்களில் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாத காவலர்களில் ஓட்டுநர் உரிமம் பெற விருப்பமுடைய காவலர்கள் மொத்தம் 35 பேருக்கு கடந்த இரண்டு மாதமாக ஆயுதப்படை மைதானத்தில் வைத்து ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று நான்கு சக்கர வாகன ஓட்டுநர் பயிற்சி முடித்த பெண் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து ஓட்டுநர் உரிமத்தை வழங்கினார்.