நாகர்கோவில் ஜன 21
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் போக்குவரத்து அலுவலின் போது கீழே கிடந்த 4000 ரூபாய் மற்றும் ஒரு செல்போன் அடங்கிய கைப்பையை கண்டெடுத்து அதை தவறவிட்டவரின் அடையாளம் கண்டறிந்து உரியவரிடம் ஒப்படைத்த நாகர்கோவில் நகர போக்குவரத்து தலைமை காவலர் மணிகண்டன்,
மற்றும் பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட ஆயுதப்படை முதல் நிலை பெண்காவலர் சஜிதா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.இரா.ஸ்டாலின் பாராட்டினார்.