சென்னை, டிச- 27, தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களை எஸ்.சி பட்டியலை விட்டு வெளியேற்ற கோரியும் மக்கள் இழந்துள்ள மாநில பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உடனடியாக சேர்க்க கோரியும் வளரும் தமிழகம் கட்சி சார்பில் பட்டியல் வெளியேற்ற ஆர்பாட்டம் சென்னை எழும்பூர் இராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடைபெற்றது .
வளரும் தமிழகம் கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் பாலை .பட்டாபிராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சென்னை மண்டல செயலாளர் அழகர்சாமி முன்னிலைவகித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் பா . இமான் சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள், தேவேந்திர குல வேளாளர் ச் சமுதாய மக்கள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
வளரும் தமிழகம் கட்சியின் தலைவர் பாலை . பட்டாபிராமன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் 1936 ஆம் ஆண்டு பிற்படுத்தபட்டோர் பிரிவில் இருந்த தேவேந்திரகுல வேளாளர்களை தாழ்த்தப்பட்ட சாதி பட்டியல் சேர்த்தார்கள் . இந்த இழிநிலையை இதற்கு மேலும் சுமக்க நாங்கள் தயாரில்லை. ஏற்கனவே மாநில அரசு பட்டியல் வெளியேற்றத்திற்கான கோப்புகளை தாமதப்படுத்தாமல் உடனடியாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்ப வேண்டும் .
சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி மத்திய மாநில அரசுகள் அவரவர் அதிகாரத்தை பயன்படுத்தி, 100% இடப்பங்கீட்டை அனைத்து சாதிக்கும் வழங்கி எங்கள் சாதிக்கான மக்கள் தொகை ஏற்ப இட ஒதுக்கீட்டை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.