நாகர்கோவில் – அக் – 12,
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலம் இரண்டாவது முறையாக பழுதடைந்து சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு மேம்பாலம் அடிக்கடி பழுதடைவதால் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், அவசர தேவைக்கு மருத்துவ மனை செல்லும் நோயாளிகள் , அரசு, மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட நெல்லை, தூத்துகுடி, குமரி, மாவட்டத்திலிருந்து அயல்நாடுகளுக்கு செல்பவர்களும் நாகர்கோவில் – திருவனந்தபுரம் சாலையின் வழியாக மார்த்தாண்டம் மேம்பாலம் கடந்து தான் திருவனந்தபுரம் விமான நிலையம் செல்ல வேண்டிய சூழல் . தற்போது நிலவி வரும் கடும் போக்கு வரத்து தெரியாமால் வெளிமாட்டங்களிலிருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் செல்லும் பயணிகள் விமான பயணத்தையே தவறவிட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியருக்கு மார்தாண்டம் பாலப்பணிகளை விரைந்து முடித்து தர கேட்டு பதிவு தபாலில் கோரிக்கை மனு அனுப்பி சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளிட்டு உள்ளர். அதில் நான் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த 6 – ஆம் வகுப்பு பயிலும் மாணவி, எங்கள் பகுதியில் பழுதடைந்து காணப்படும் மார்த்தாண்டாம் மேம்பால பணிகள் நடை பெற்று வருகிறது. நாங்கள் தினமும் பள்ளி கூடம் செல்லும் போது அங்கு நிலவி வரும் கடும் போக்கு வரத்தில் சிக்கி கொண்டு பள்ளி வகுப்பில் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் சோர்வடைந்து தூக்கம், தூக்கமாக வருவகிறது, எனக்கு மட்டும் அல்ல என்னுடன் பயிலும் சக மாணவ, மாணவிகளுக்கும் இது தான் நிலமையாக உள்ளது. ஆகையால் எங்களது கல்வி மீது மாவட்ட ஆட்சியர் அக்கரை கொண்டு மார்த்தாண்டம் மேம்பால பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும் என்று வெளியிட்டு உள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.